வியாழன், 23 அக்டோபர், 2008

என் முதலாவது ரதி - தமிழரசி

தமிழரசி தான் எனது முதல் ரதி. அவளும் நானும் அந்த ஆண்டு தான் ஒரே வகுப்பில் புதிதாய் சேர்ந்தவர்கள். அவளும் நானும் அந்த கிராமத்தில் வெவ்வேறு வகுப்பை சேர்ந்த மைனாரிட்டி சமூகத்தினர். அதோடு அவள் மிக மிக சிவப்பாயும் அழகாகவும் நான் சுமாரான சிவப்பாகவுமிருந்தோம். அந்த வகுப்பில் மட்டுமின்றி அந்த பள்ளியிலே நடை, உடை, ஸ்கூல்பேக் என நாகரீகமாக இருந்தோம். மற்ற பசங்க எல்லாம் எங்க அளவுக்கு இல்லாததினால் நாங்கள் அறிவிக்கபடாத ரோல் மாடலாக ஆகியிருந்தோம்.மேற்கூறிய காரணங்களினால் நானும் அவளும் ஒரு குரூப்.

நான் நான்கவதாக ஒரு பள்ளியில் படிக்கும் போது ஒரு ட்ராமா போட்டார்கள். அதில் நான் பாண்டிய மன்னன், தமிழரசியோ என் மஹாராணி (கோப்பெருந்தேவியாக) யாக பக்கத்தில் அமர வேண்டிய சூழல். எனக்கோ பயம் கலந்த பெருமை. வகுப்பில் எல்லோரும் என்னையே பார்த்தனர். பள்ளியில் உள்ள நான்கைந்து வாத்தியார்களும் இதில் அடக்கம். அன்று மட்டுமின்றி அடுத்தடுத்த நாட்க்களிளும் தமிழரசியை கண்ட போதெல்லாம் எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது. எனதொத்த நண்பர்கள் அனைவரும் எங்களை இன்னமும் பாண்டிய மன்னனாகவும் கோப்பெருந்தேவியாகவும் கருதி சீண்டிய போது பெருமையாக இருந்தது.
இந்த சீண்டல்களும், அவளை காணும் பொதெல்லாம் நான், கண், காது மூக்கு என முகம் சிவக்கும். அவள் அப்பா ஆஜானுபாகவும் முறுக்கு மீசையுடன் இருப்பார், ஆனால் எப்போதாவது தான் மெட்ராஸில் இருந்து வருவார். அவள் தன் அத்தை வீட்டில் தங்கி படித்து வந்தாள். அவள் அத்தையின் இளைய மகன் என் வகுப்பு தோழன் தான். ஆனால் மகா மண்டு. நான் க்ளாஸ் மானிட்டரானதால் படிக்காத மாணவர்களை தண்டிக்கும் உரிமையும் எனக்கு வாத்தியார் தருவதுண்டு. அந்த சமயங்களில் அவன் தண்டனையை இலகுவாக்குவது என் கைகளில். இதற்க்கு பிரதியுபகாரமாக அவனை (அவன் வீட்டில் இருந்த தமிழரசியை ) பார்க்க வீட்டுக்கு செல்லும் போது என் ராஜ்ஜியம் தான்.
ஓராண்டு காலம் கழிந்து அவள் தான் மெட்ராஸுக்கே திரும்பி சென்று விட்டது என் முதல் காதல் வெற்றியா தோல்வியா என்று தெரியவில்லை. பிறிதொரு காலத்தில் ஏறத்தாழ பத்தாண்டு கழிந்து அடையாளம் தெரியாத வாலைகுமரியாக அதே கிராமத்தில் எனது ஆட்டோகிராஃப் விஜயத்தில் சந்திக்க நேர்ந்ததும், அவள் அவளுடைய அத்தை மகனான என் இன்னொரு வகுப்பு தோழனனின் அண்ணனை மணந்ததும் அறிய நேரிட்டது. நான் பழைய நினைப்பில்

2 கருத்துகள்:

  1. //இப்போ எத்தனை ஆச்சு?//
    மிக்க நன்றி. தாங்கள் தான் எனது கன்னி முயற்ச்சிக்கு பின்னூட்டமிட்ட முதல் வாசகர். தற்போது தான் தற்காலிக ஓய்வில் அசை போல் ஆரம்பித்துள்ளேன். செஞ்சுரி தாண்டியிருக்கும். நேரம் கிடைக்கும் போது தொடர்வேன். மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு