திங்கள், 22 டிசம்பர், 2008

உலகத்திலேயே அதி அழகானவை

உலகத்திலேயே அதி அழகான தாவரம்.
நீர்க்குமிழி போலுள்ளது.


உலகத்திலேயே அதி அழகான மேம்பாலம்,
ஜப்பான்

உலகத்திலேயே அதி அழகான குதிரை,
அரேபியன்


உலகத்திலேயே அதி அழகான நீர்வீழ்ச்சி
நயகரா ஃபால்ஸ், அமெரிக்கா & கனடா


உலகத்திலேயே அதி அழகான கண்கள்

ஆப்கானிஸ்தானிலிருந்து.



உலகத்திலேயே அதி அழகான பொன்னு

ஃப்ரான்ஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட மொராக்கோ நாட்டு பொன்னு.


உலகத்திலேயே அதி அழகான பையன்

2007ல் ஆஸ்திரேலியாவில் உள்ள பாகிஸ்த்தானை சேர்ந்த 1வருட 9மாத பையன்.

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

பெண்கள் தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம்

பெண்கள் தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம். :( ..ஆண்களே, இத்தனை பேர் சாகனுமா?. எல்லா பெண்களும் இதே மாதிரி எண்ணம் கொண்டவர்களாக இருக்கமாட்டார்கள்.) உஷார்..............



மற்றுமொரு புஷ் மீது செருப்பெறியும் போட்டி

மற்றுமொரு புஷ் மீது செருப்பெறியும் போட்டி

சமீபத்தில் ரகசியமாக ஈராக் சென்று பகிரங்கமாக செருப்படி வாங்கினார். அதை உலகமே ரசித்தது. உங்கள் பங்குக்கு நீங்களும் செருப்படி கொடுக்க நினைத்தால் கிளிக்கி பங்கு பெற்று வெற்றி பெறவும், ஆனந்தப்படவும்.

http://sankarlal55.blogspot.com/2008/12/blog-post.html

http://www.sockandawe.com/

புதன், 17 டிசம்பர், 2008

செருப்படி வாங்கின புஷ் -நீங்களும் அடிக்கலாம்

சமீபத்தில் ரகசியமாக ஈராக் சென்று பகிரங்கமாக செருப்படி வாங்கினார். அதை உலகமே ரசித்தது. உங்கள் பங்குக்கு நீங்களும் செருப்படி கொடுக்க நினைத்தால் கிளிக்கி ஆனந்தப்படவும்.
http://www.kroma.no/2008/bushgame/

திங்கள், 1 டிசம்பர், 2008

படமும் படமும் - சோதனையோட்டம்

இந்த பதிவு என‌து வீடியோ காட்சி சேர்க்கும் சோதனையோட்டம்.

நான் பார்த்த மிக மோசமான கோர விபத்துக்களில் ஒன்று. கனரக நீளபார் வண்டியின் ஓட்டுனர் கவனித்திருந்தாலும் அவரால் தவிற்க்க முடியாத விபத்து. இதில் உள்ள படிப்பினை என்னவென்றால் (முக்கியமாக இருசக்கர உபயோகிப்பாளர்கள்) சாலையில் தடம் மாறும்போது கவனமாக இருக்கவும்.

மெல்லிய மனம் கொண்டவர்கள் இதைப் பார்க்க வேண்டாம்

வெள்ளி, 21 நவம்பர், 2008

மன்னார்குடி அசோகரின் பங்களிப்பில் எனக்கு பிடித்த சில - 1

From Karuthu.com
On the historic occasion of Obama's election as US President, this is what i guess Mu Ka would have wanted to tell him.
ஓபாமா ! உன் தாய் எனது தமக்கை ஆனதால்
நானே உனது மாமா

தந்தை சொல்லை விட
இல்லை ஒரு மந்திரம்
உன் மாமன் அறிவானே
ஆட்சி காக்கும் அரசியல் தந்திரம்

வெற்றிக் களிப்பில் பசியெடுக்கும்
பானி பூரி, மசால் பூரி மற்றும் பேல்
உண்டவாறே
இந்த மாமன் சொல்வதைக் கேள்

அமெரிக்க ஜனாதிபதிகளில் நீ
முதல் கறுப்பு
உனது ஆட்சியில் வேகக்கூடாது
ஆரியனின் பருப்பு

ஜார்ஜ் புஷ்யை துரத்தப் போகிறவன் நீ
ஜார்ஜ் -இன் கோட்டையிலேயே அமர்பவன் நான்
ஆக
நீயும் திராவிடனே
நானும் அமெரிக்கனே
எனவே நமக்குள் ஏன் இனி பிரிவினை
உனக்கடுத்து அழகிரி ஏறட்டும் அமெரிக்க அரியணை

நீ செய்ய வேண்டிய காரியங்கள் தான் எத்தனை

விசா வைத்திருக்கும் ஆரியனை
விசாரித்து வீட்டுக்கு அனுப்பிவிடு
திராவிடனுக்கு விசாவில் தந்திடு ஒதுக்கீடு
அவனும் அமெரிக்கன் தானே
இதில் யார் செய்வார் குறுக்கீடு

இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்தாரே புஷ்
அதன் பெயர் அணுசக்தி ஒப்பந்தமாம்
'அணு' என்ற ஆரிய 'அனு' எதற்கு
'சக்தி' என்ற ஆரிய மாய்மாலம் எதற்கு
ஆக
ஒப்பந்தத்திற்கு 'பெரியார் புரிந்துணர்வு'
என்ற புதிய பெயரிடு
ஆரிய கசடுகளை களைந்திடு

இனி ஆட்சியின் மாட்சி குறித்து
சொல்வேன் கேள்

ஒரு டாலருக்கு தந்திடு ஒரு பிஸ்ஸா
நடுநடுங்கிடுமே எதிரணி லேசா

திராவிட அமெரிக்கனுக்கு தந்திடு எல்சிடி
இது தான் இலவச அரசியலின் ஏபிசிடி

திராவிட அமெரிக்கனுக்கு கொடு லிவைஸ் ஜீன்ஸ்
யார் உன்னை தடுக்க
வெள்ளை ஆரிய அமெரிக்கன் வெறும் நாரெடுத்த பீன்ஸ்

ஓபாமாவே கவனமாகக் கேள்
பல்கலைக் கழகமாம் பிரின்ஸ்டன் மற்றும் ஹார்வார்ட்
இதில் சேர்த்திடாதே ஆரிய ஃபார்வார்ட்

யானை இருந்தாலும் இறந்தாலும்
ஆயிரன் பொன்
திராவிட அமெரிக்கன் மார்க் எடுக்காவிடினும்
ஆகவேண்டும் வின்

திராவிட தமிழனுக்கு அச்சிடு
பெரியார் படம் போட்ட தனி டாலர்
உவகையில் என் உள்ளம் பூரிக்க
உயந்திடுமே என் மேல்சட்டையின் காலர்

நியூயார்க் டைம்ஸ் வாஷிங்டன் போஸ்ட்
ஆரிய மாயை பரப்பும் இவையெல்லாமே வேஸ்ட்
திராவிட அமெரிக்கனுக்கு காலையில் ஒரே ஜோலி
அது அவன் படிக்கும் அறிவாலயம் தந்திடும் முரசொலி

ஆரிய வெள்ளை அமெரிக்க ஊடங்கள் பாராது நடுநிலை
அதைக் காண வாங்கிடு
மதியம் என் அன்பு இளவல் வீரமணியின் விடுதலை

கிறிஸ்துமஸுக்கு தந்திடு திராவிடனுக்கு இலவச கேக்கு
வெள்ளை ஆரிய அமெரிக்கனை ஆக்கிடுவோம் பேக்கு

நகரமெங்கும் கட்டிடு பார் புகழும் பல பாலம்
டென்டரை என் தம்பி பாலுவுக்கு தந்திட்டால்
திராவிட அமெரிக்கனுக்கு நல்ல காலம்

யாரேனும் உனக்கு தந்திடின் தொல்லை
அடுத்த விமானத்தில் விசா இன்றியே
பறந்து வருவான் அழகிரி
திராவிட குலத்தின் மூத்த பிள்ளை

சுப்பிரமணியம் சாமி
ஜெயலலிதா மாமி
இருவருக்கும்
விசா தராது
திராவிடனுக்கும் மட்டும் விரிவடையும் உன்
விசாலமான மனதை காமி

ஆயிரம் நடக்கட்டும் மின் வெட்டு
அஞ்சிடாமலே
சேர்த்துக்கொண்டிரு டாலர் துட்டு

ஆனது ஆகட்டும் தொலையட்டும் ஈராக்கு
அது இனிமேல் சப்பி துப்பிய பான் பராக்கு

எதிரிகளை அழிக்க உனக்கெதற்கு ந்யூக்கிளியர்
அழகிரியை அனுப்புகிறேன்
அவன் செய்திடுவானே ஆல் க்ளியர்

இன மான உணர்வுக்கு இருக்கிறார் பேராசிரியர்
பண மான உணர்வுக்கு நானே உனக்கு ஆசிரியர்

விரைந்து போட்டுவிடு ஒரு சட்டம்
அமெரிக்க பல்கலைக் கழகம் அனைத்தும்
எனக்கு தரவேண்டுமே முனைவர் பட்டம்

நடுநிசியில் உன் மனைவி கால் உன் மீது பட்டாலும்
"கொல பண்றாங்க கொல பண்றாங்க" என்று கத்திடு
திராவிடனுக்கு நன்மை பயத்திடுமென்றால்
அமெரிக்கா என்ன அன்டார்டிக்கவையும் வித்திடு

காலை உணவாக நீ உண்டுவிடு
நாலு திராவிட இட்லி ஒரு ஹாப் பாயில்
நாளைக்கு ஒரு முறை படித்துவிடு
கருத்து அதில் தானே எழுதுகிறார்
என் அன்பு இளவல் ஸ்பாயில்

இவ்வாறாக அறிவுரை பலவுண்டு
ஆயினும்
தோளிலிருந்து நழுவுகிறது மஞ்சள் துண்டு

உறுதுணையாய் உன் பின்னால் நிற்க
எமது படையுண்டு
ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என்று
உன் வாரிசு யார் என்ற கேள்விக்கு
எம்மிடத்தில் விடையுண்டு.

ஆரியம் வியர்க்க திராவிடம் செழிக்க
படைத்திடு புதிய உலகு
ஆரிய வாயைக் கிழிக்கட்டும்
உனது திராவிட அலகு

ஞாயிறு, 2 நவம்பர், 2008

என் இரண்டாவது ரதி - ராஜாமணி

என் இரண்டாவது ரதி - ராஜாமணி. என் வகுப்புத் தோழனின் முறைப்பெண். அவன் அவளை டாவடிக்க அவனுடன் நானும் செல்வது வழக்கம். அவன் அவளை சீண்டி விளையாடும் போது நானும் சேர்ந்து கொள்ள ஆரம்பித்து, பின்னர் அவன் வயல் வேலையாகவோ அல்லது வீட்டு வேலையாகவோ அவன் பிஸியாகும் போது நான் மட்டும் தனியாக கடலை போட வேண்டியிருக்கும். பின்னர் அவளை நான் மட்டும் ஏகபோகமாக உரிமை கொண்டாட சாணக்கியத்தனம் பயில வேண்டிய நிர்ப்பந்தம். அதன் பொருட்டு பொய் பயில ஆரம்பித்ததும் இந்த காலகட்டம் தான்.
ராஜாமணியை கவர வேண்டி ஆசையுடன் திண்பன்டங்களையும் வறண்ட ஆற்றில் பொறுக்கியெடுத்த அழகான அஞ்சாங்கல்லையும் கொடுக்க ஆரம்பித்து பொன்வண்டுக்காக கண்ட குப்பைமேட்டையும் அலைந்து திரிந்ததும் உண்டு.

வியாழன், 23 அக்டோபர், 2008

என் முதலாவது ரதி - தமிழரசி

தமிழரசி தான் எனது முதல் ரதி. அவளும் நானும் அந்த ஆண்டு தான் ஒரே வகுப்பில் புதிதாய் சேர்ந்தவர்கள். அவளும் நானும் அந்த கிராமத்தில் வெவ்வேறு வகுப்பை சேர்ந்த மைனாரிட்டி சமூகத்தினர். அதோடு அவள் மிக மிக சிவப்பாயும் அழகாகவும் நான் சுமாரான சிவப்பாகவுமிருந்தோம். அந்த வகுப்பில் மட்டுமின்றி அந்த பள்ளியிலே நடை, உடை, ஸ்கூல்பேக் என நாகரீகமாக இருந்தோம். மற்ற பசங்க எல்லாம் எங்க அளவுக்கு இல்லாததினால் நாங்கள் அறிவிக்கபடாத ரோல் மாடலாக ஆகியிருந்தோம்.மேற்கூறிய காரணங்களினால் நானும் அவளும் ஒரு குரூப்.

நான் நான்கவதாக ஒரு பள்ளியில் படிக்கும் போது ஒரு ட்ராமா போட்டார்கள். அதில் நான் பாண்டிய மன்னன், தமிழரசியோ என் மஹாராணி (கோப்பெருந்தேவியாக) யாக பக்கத்தில் அமர வேண்டிய சூழல். எனக்கோ பயம் கலந்த பெருமை. வகுப்பில் எல்லோரும் என்னையே பார்த்தனர். பள்ளியில் உள்ள நான்கைந்து வாத்தியார்களும் இதில் அடக்கம். அன்று மட்டுமின்றி அடுத்தடுத்த நாட்க்களிளும் தமிழரசியை கண்ட போதெல்லாம் எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது. எனதொத்த நண்பர்கள் அனைவரும் எங்களை இன்னமும் பாண்டிய மன்னனாகவும் கோப்பெருந்தேவியாகவும் கருதி சீண்டிய போது பெருமையாக இருந்தது.
இந்த சீண்டல்களும், அவளை காணும் பொதெல்லாம் நான், கண், காது மூக்கு என முகம் சிவக்கும். அவள் அப்பா ஆஜானுபாகவும் முறுக்கு மீசையுடன் இருப்பார், ஆனால் எப்போதாவது தான் மெட்ராஸில் இருந்து வருவார். அவள் தன் அத்தை வீட்டில் தங்கி படித்து வந்தாள். அவள் அத்தையின் இளைய மகன் என் வகுப்பு தோழன் தான். ஆனால் மகா மண்டு. நான் க்ளாஸ் மானிட்டரானதால் படிக்காத மாணவர்களை தண்டிக்கும் உரிமையும் எனக்கு வாத்தியார் தருவதுண்டு. அந்த சமயங்களில் அவன் தண்டனையை இலகுவாக்குவது என் கைகளில். இதற்க்கு பிரதியுபகாரமாக அவனை (அவன் வீட்டில் இருந்த தமிழரசியை ) பார்க்க வீட்டுக்கு செல்லும் போது என் ராஜ்ஜியம் தான்.
ஓராண்டு காலம் கழிந்து அவள் தான் மெட்ராஸுக்கே திரும்பி சென்று விட்டது என் முதல் காதல் வெற்றியா தோல்வியா என்று தெரியவில்லை. பிறிதொரு காலத்தில் ஏறத்தாழ பத்தாண்டு கழிந்து அடையாளம் தெரியாத வாலைகுமரியாக அதே கிராமத்தில் எனது ஆட்டோகிராஃப் விஜயத்தில் சந்திக்க நேர்ந்ததும், அவள் அவளுடைய அத்தை மகனான என் இன்னொரு வகுப்பு தோழனனின் அண்ணனை மணந்ததும் அறிய நேரிட்டது. நான் பழைய நினைப்பில்

புதன், 22 அக்டோபர், 2008

மன்மதலீலை - முதல் சோதனையோட்டம்

முதல் சோதனையோட்டம். வெற்றி பெற மன்மதனை (இறைவனை) வேண்டுகிறேன்