From Karuthu.com
On the historic occasion of Obama's election as US President, this is what i guess Mu Ka would have wanted to tell him.
ஓபாமா ! உன் தாய் எனது தமக்கை ஆனதால்
நானே உனது மாமா
தந்தை சொல்லை விட
இல்லை ஒரு மந்திரம்
உன் மாமன் அறிவானே
ஆட்சி காக்கும் அரசியல் தந்திரம்
வெற்றிக் களிப்பில் பசியெடுக்கும்
பானி பூரி, மசால் பூரி மற்றும் பேல்
உண்டவாறே
இந்த மாமன் சொல்வதைக் கேள்
அமெரிக்க ஜனாதிபதிகளில் நீ
முதல் கறுப்பு
உனது ஆட்சியில் வேகக்கூடாது
ஆரியனின் பருப்பு
ஜார்ஜ் புஷ்யை துரத்தப் போகிறவன் நீ
ஜார்ஜ் -இன் கோட்டையிலேயே அமர்பவன் நான்
ஆக
நீயும் திராவிடனே
நானும் அமெரிக்கனே
எனவே நமக்குள் ஏன் இனி பிரிவினை
உனக்கடுத்து அழகிரி ஏறட்டும் அமெரிக்க அரியணை
நீ செய்ய வேண்டிய காரியங்கள் தான் எத்தனை
விசா வைத்திருக்கும் ஆரியனை
விசாரித்து வீட்டுக்கு அனுப்பிவிடு
திராவிடனுக்கு விசாவில் தந்திடு ஒதுக்கீடு
அவனும் அமெரிக்கன் தானே
இதில் யார் செய்வார் குறுக்கீடு
இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்தாரே புஷ்
அதன் பெயர் அணுசக்தி ஒப்பந்தமாம்
'அணு' என்ற ஆரிய 'அனு' எதற்கு
'சக்தி' என்ற ஆரிய மாய்மாலம் எதற்கு
ஆக
ஒப்பந்தத்திற்கு 'பெரியார் புரிந்துணர்வு'
என்ற புதிய பெயரிடு
ஆரிய கசடுகளை களைந்திடு
இனி ஆட்சியின் மாட்சி குறித்து
சொல்வேன் கேள்
ஒரு டாலருக்கு தந்திடு ஒரு பிஸ்ஸா
நடுநடுங்கிடுமே எதிரணி லேசா
திராவிட அமெரிக்கனுக்கு தந்திடு எல்சிடி
இது தான் இலவச அரசியலின் ஏபிசிடி
திராவிட அமெரிக்கனுக்கு கொடு லிவைஸ் ஜீன்ஸ்
யார் உன்னை தடுக்க
வெள்ளை ஆரிய அமெரிக்கன் வெறும் நாரெடுத்த பீன்ஸ்
ஓபாமாவே கவனமாகக் கேள்
பல்கலைக் கழகமாம் பிரின்ஸ்டன் மற்றும் ஹார்வார்ட்
இதில் சேர்த்திடாதே ஆரிய ஃபார்வார்ட்
யானை இருந்தாலும் இறந்தாலும்
ஆயிரன் பொன்
திராவிட அமெரிக்கன் மார்க் எடுக்காவிடினும்
ஆகவேண்டும் வின்
திராவிட தமிழனுக்கு அச்சிடு
பெரியார் படம் போட்ட தனி டாலர்
உவகையில் என் உள்ளம் பூரிக்க
உயந்திடுமே என் மேல்சட்டையின் காலர்
நியூயார்க் டைம்ஸ் வாஷிங்டன் போஸ்ட்
ஆரிய மாயை பரப்பும் இவையெல்லாமே வேஸ்ட்
திராவிட அமெரிக்கனுக்கு காலையில் ஒரே ஜோலி
அது அவன் படிக்கும் அறிவாலயம் தந்திடும் முரசொலி
ஆரிய வெள்ளை அமெரிக்க ஊடங்கள் பாராது நடுநிலை
அதைக் காண வாங்கிடு
மதியம் என் அன்பு இளவல் வீரமணியின் விடுதலை
கிறிஸ்துமஸுக்கு தந்திடு திராவிடனுக்கு இலவச கேக்கு
வெள்ளை ஆரிய அமெரிக்கனை ஆக்கிடுவோம் பேக்கு
நகரமெங்கும் கட்டிடு பார் புகழும் பல பாலம்
டென்டரை என் தம்பி பாலுவுக்கு தந்திட்டால்
திராவிட அமெரிக்கனுக்கு நல்ல காலம்
யாரேனும் உனக்கு தந்திடின் தொல்லை
அடுத்த விமானத்தில் விசா இன்றியே
பறந்து வருவான் அழகிரி
திராவிட குலத்தின் மூத்த பிள்ளை
சுப்பிரமணியம் சாமி
ஜெயலலிதா மாமி
இருவருக்கும்
விசா தராது
திராவிடனுக்கும் மட்டும் விரிவடையும் உன்
விசாலமான மனதை காமி
ஆயிரம் நடக்கட்டும் மின் வெட்டு
அஞ்சிடாமலே
சேர்த்துக்கொண்டிரு டாலர் துட்டு
ஆனது ஆகட்டும் தொலையட்டும் ஈராக்கு
அது இனிமேல் சப்பி துப்பிய பான் பராக்கு
எதிரிகளை அழிக்க உனக்கெதற்கு ந்யூக்கிளியர்
அழகிரியை அனுப்புகிறேன்
அவன் செய்திடுவானே ஆல் க்ளியர்
இன மான உணர்வுக்கு இருக்கிறார் பேராசிரியர்
பண மான உணர்வுக்கு நானே உனக்கு ஆசிரியர்
விரைந்து போட்டுவிடு ஒரு சட்டம்
அமெரிக்க பல்கலைக் கழகம் அனைத்தும்
எனக்கு தரவேண்டுமே முனைவர் பட்டம்
நடுநிசியில் உன் மனைவி கால் உன் மீது பட்டாலும்
"கொல பண்றாங்க கொல பண்றாங்க" என்று கத்திடு
திராவிடனுக்கு நன்மை பயத்திடுமென்றால்
அமெரிக்கா என்ன அன்டார்டிக்கவையும் வித்திடு
காலை உணவாக நீ உண்டுவிடு
நாலு திராவிட இட்லி ஒரு ஹாப் பாயில்
நாளைக்கு ஒரு முறை படித்துவிடு
கருத்து அதில் தானே எழுதுகிறார்
என் அன்பு இளவல் ஸ்பாயில்
இவ்வாறாக அறிவுரை பலவுண்டு
ஆயினும்
தோளிலிருந்து நழுவுகிறது மஞ்சள் துண்டு
உறுதுணையாய் உன் பின்னால் நிற்க
எமது படையுண்டு
ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என்று
உன் வாரிசு யார் என்ற கேள்விக்கு
எம்மிடத்தில் விடையுண்டு.
ஆரியம் வியர்க்க திராவிடம் செழிக்க
படைத்திடு புதிய உலகு
ஆரிய வாயைக் கிழிக்கட்டும்
உனது திராவிட அலகு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நல்லா இருக்குங்க... அங்கங்க விஜய T.R!
பதிலளிநீக்குஇன்னாதுங்க இது. கவுஜயா கொ.வெ.கவுஜயா
பதிலளிநீக்கு//நல்லா இருக்குங்க... அங்கங்க விஜய T.R!
பதிலளிநீக்கு// இது நான் ரசித்த ஒரு கவிதையேயன்றி, மற்ற விமர்சனங்கள் உண்மைப்பதிவரையே சாரும்.
கருத்துப்பின்னூட்டத்திற்க்கு நன்றி
//இன்னாதுங்க இது. கவுஜயா கொ.வெ.கவுஜயா// மன்னார்குடியார் ரசித்ததை நானும் ரசித்தேன். அம்புடுதேன்.
பதிலளிநீக்குகருத்துப்பின்னூட்டத்திற்க்கு நன்றி
அருமையான கவிதை, நண்பர் அசோகர் வாழ்க.
பதிலளிநீக்கு